< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச்
|6 Jan 2023 12:35 AM IST
கால்இறுதியில் கனடா வீரர் ஷபோவாலோவ், ஜோகோவிச்சை சந்திக்கிறார்.
அடிலெய்டு,
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, (7-3), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் பிரான்சின் குவின்டின் ஹாலிஸ்சை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கனடா வீரர் ஷபோவாலோவ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ரோமன் சபியூன்லினை (ரஷியா) தோற்கடித்தார். கால்இறுதியில் ஷபோவாலோவ், ஜோகோவிச்சை சந்திக்கிறார். இதே போல் ஜானிக் சின்னெர் (இத்தாலி), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா) ஆகியோரும் கால்இறுதியை எட்டினர்.