அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: பியான்கா போராடி வெற்றி
|அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது.
அடிலெய்டு,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 16-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி இரண்டு பகுதியாக நடத்தப்படுகிறது.
இதன்படி முதலாவது அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது.
இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 0-6-, 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 0-6, 2-5 என்று தோல்வியின் விளிம்பில் இருந்த பியான்கா அதன் பிறகு டைபிரேக்கர் வரை போராடி எழுச்சி பெற்று வெற்றியை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 12 நிமிடங்கள் நீடித்தது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரர்கள் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டேனில் மெட்விடேவ் (ரஷியா), 6-ம் நிலை வீரர் அலியாசிம் (கனடா) உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ஜோகோவிச் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் லெஸ்டினேவை எதிர்கொள்கிறார்.