< Back
டென்னிஸ்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: அஸரென்கா அதிர்ச்சி தோல்வி

Image Courtesy : @AdelaideTennis twitter

டென்னிஸ்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: அஸரென்கா அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
7 Jan 2023 1:53 AM IST

செக்குடியரசின் லின்டா நோஸ்கோவா முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தினார்.

அடிலெய்டு,

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் வான்டர்சோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்ற ஆட்டங்களில் செக்குடியரசின் லின்டா நோஸ்கோவா 6-4, 6-7 (3-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதே போல் ருமேனியா வீராங்கனை இரினா கெமிலியா பெகு 7-5, 6-4 என்ற நேர்செட்டில் வெரோனிகா குடெர்மிடோவாவை (ரஷியா) தோற்கடித்தார்.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் 7-6 (7-5), 7-5 என்ற நேர்செட்டில் மார்டா கோஸ்யக்கை (உக்ரைன்) வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

மேலும் செய்திகள்