< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன்..!
|8 Jan 2023 3:32 PM IST
அடிலெய்டு டென்னிஸ் போட்டியில் சபலென்கா சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
அடிலெய்டு,
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பெலாரஸ் டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா , செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவா ஆகியோர் மோதினர்
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.அடிலெய்டு டென்னிஸ் போட்டியில் சபலென்கா சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.