< Back
பிற விளையாட்டு
நாட்டு நாட்டு பாடலுக்கு ஸ்டெப் போட்டு நடனம் ஆடிய டபிள்யூ.டபிள்யூ.இ. சூப்பர்ஸ்டார்கள்
பிற விளையாட்டு

நாட்டு நாட்டு பாடலுக்கு ஸ்டெப் போட்டு நடனம் ஆடிய டபிள்யூ.டபிள்யூ.இ. சூப்பர்ஸ்டார்கள்

தினத்தந்தி
|
17 Sept 2023 6:01 PM IST

ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு டபிள்யூ.டபிள்யூ.இ. சூப்பர்ஸ்டார்கள் ஒன்றாக ஸ்டெப் போட்டு நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

ஐதராபாத்,

டபிள்யூ.டபிள்யூ.இ. எனப்படும் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியானது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பிரபலம் வாய்ந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில், ஐதராபாத் நகரில் கடந்த வாரம் டபிள்யூ.டபிள்யூ.இ. போட்டியின் சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டாகிள் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில், மல்யுத்த சூப்பர்ஸ்டார்களான ட்ரூ மெகின்டயர், ஜிண்டர் மகால், சமி ஜயன் மற்றும் கெவின் ஓவன்ஸ் போன்றோர், ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு மேடையில் ஒன்றாக ஸ்டெப் போட்டு நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

இதுபற்றிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. வைரலான வீடியோவை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 6 லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.

இந்த போட்டிகளில் தீவிர மோதல், சண்டை போன்றவையே பிரபலம் வாய்ந்தது. போட்டியில் தந்திரங்கள் மற்றும் யுக்திகளுடன் எதிராளியை வீழ்த்தி போட்டியாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

இதனை காணவே பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். ஆனால், பாடல் ஒன்றுக்கு இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடிய காட்சிகளை பலர் புகழ்ந்தபோதும் சிலர், இதுபோன்ற நிகழ்ச்சிக்கு நடனம் ஆடியது உகந்ததல்ல என்றும் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்