< Back
பிற விளையாட்டு
உலக டேபிள் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா - அய்ஹிகா ஜோடி சாம்பியன்

Sutirtha and Ayhika Mukherjee (image courtesy: Olympics.com/SAI via ANI)

பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா - அய்ஹிகா ஜோடி சாம்பியன்

தினத்தந்தி
|
26 Jun 2023 4:25 AM IST

உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா - அய்ஹிகா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

துனிஷ்,

உலக டேபிள் டென்னிஸ் 'கன்டென்டர் துனிஷ் 2023' சாம்பியன்ஷிப் போட்டி துனிசியாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி - அய்ஹிகா முகர்ஜி ஜோடி ஜப்பானின் மியு கிஹாரா - மிவா ஹரிமோட்டா ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் சுதிர்தா - அய்ஹிகா ஜோடி 11-5, 11-6, 5-11, 13-11 என்ற செட் கணக்கில் மியு கிஹாரா - மிவா ஹரிமோட்டா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் என்ற பெருமையை சுதிர்தா, அய்ஹிகா ஜோடி பெற்றது.

மேலும் செய்திகள்