< Back
பிற விளையாட்டு
தேசிய பயிற்சி முகாமை தொடங்க மல்யுத்த வீரர்கள் கோரிக்கை

கோப்புப்படம் ANI

பிற விளையாட்டு

தேசிய பயிற்சி முகாமை தொடங்க மல்யுத்த வீரர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
3 May 2023 2:33 AM IST

இன்னும் 2 மாதங்களில் ஆசிய விளையாட்டுக்கான அணித் தேர்வு நடக்க இருப்பதால் தேசிய பயிற்சி முகாம் அவசியமாகும்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த வீரர்களுக்கான தேசிய பயிற்சி முகாம் அரியானாவின் சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்திலும், வீராங்கனைகளுக்கு லக்னோவிலும் பயிற்சி முகாம் நடந்து வந்தது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக அதாவது ஏப்ரல் 8-ந்தேதி பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 23-ந்தேதியில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாட்டின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பாலியல் சர்ச்சையில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயிற்சி முகாம் மீண்டும் தொடங்கப்படவில்லை.

சீனியர், ஜூனியர், கேடட் பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி முகாமில் பங்கேற்பது வழக்கம். இன்னும் 2 மாதங்களில் ஆசிய விளையாட்டுக்கான அணித் தேர்வு நடக்க இருப்பதால் தேசிய பயிற்சி முகாம் அவசியமாகும்.

இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி முகாமை மீண்டும் தொடங்க வேண்டும் இல்லாவிட்டால் ஜூனியர் வீரர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்று இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பயிற்சி முகாம் தொடங்காததால் உண்மையிலேயே சிரமப்படுவதாக போராட்ட களத்திற்கு செல்லாத மற்றொரு வீரர் சந்தீப் தேஷ்வால் கூறினார்.

மேலும் செய்திகள்