< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீரர் தீபக் புனியா
|12 May 2024 1:43 AM IST
இந்திய மல்யுத்த வீரரான தீபக் பூனியா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இஸ்தான்புல்,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான உலக மல்யுத்த தகுதி சுற்று போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா 4-6 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் சூசென்னிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.