< Back
பிற விளையாட்டு
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
பிற விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
20 Sept 2022 7:49 PM IST

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு டெல்லியில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனையான முறையே பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் இறுதி நாளில் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் வெண்கலம் வென்றுள்ளார். 2018-ம் ஆண்டில் வெள்ளி, 2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வெண்கல பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இந்த போட்டியில், இதுவரை மொத்தம் 4 பதக்கங்களை நாட்டுக்காக வென்று அவர் சாதனை படைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் பெல்கிரேடு நகரில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பினார். இதன்படி, அவர் டெல்லியில் இன்று வந்திறங்கினார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

திறந்த காரில் நின்றபடி இருந்த அவரை வரவேற்க வந்தவர்கள், அவருடன் கை குலுக்கியும், செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். அதில் திறந்த நிலையிலான காரில் சிறுவன் ஒருவன் ஏறி அமர்ந்து கொண்டான். பின்பு, பூனியாவிடம் கைகொடுத்து விட்டு விடைபெற்று சென்றான். இதுபற்றிய வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்