< Back
பிற விளையாட்டு
டேபிள் டென்னிஸ் போட்டி: இந்திய அணி வெற்றி
பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் போட்டி: இந்திய அணி வெற்றி

தினத்தந்தி
|
18 Feb 2024 3:30 AM IST

முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

பூசன்,

உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள பூசன் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'குரூப்-3'-ல் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சிலியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் சரத் கமல், ஹர்மீத் தேசாய், சத்யன் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.

இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி, போலந்துடன் மோதுகிறது.

மேலும் செய்திகள்