உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடர்... இந்தியாவில் முதன்முறையாக
|இந்தியாவில் முதன்முறையாக உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரை நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தலேகாவோ,
உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரை நாட்டின் மிக பெரிய சுற்றுலா தலம் என அறியப்படும் கோவாவில் நடத்த உலக டேபிள் டென்னிஸ் போட்டி அமைப்பு அனுமதி அளித்து உள்ளது.
இதன் அறிவிப்புக்காக நடந்த நிகழ்ச்சியில் உலக டேபிள் டென்னிஸ் போட்டி அமைப்பின் மேலாண் இயக்குனர் மேட் பவுண்ட், கோவா விளையாட்டு கழகத்தின் செயல் இயக்குனர் கீதா நாக்வெங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கோவா சுற்றுலா மந்திரி ரோகன் கான்தே கலந்து கொண்டு இதற்கான அறிவிப்பை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். நாட்டில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரானது 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.
கோவாவின் பனாஜி நகரின் தென்பகுதியில் உள்ள தலேகாவ் என்ற நகரில் உள்ள கோவா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்த ஷியாம பிரசாத் முகர்ஜி உள்ளரங்கத்தில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.