< Back
பிற விளையாட்டு
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சத்யன் ஞானசேகரன் அசத்தல்- ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

Image Courtesy: AFP

பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சத்யன் ஞானசேகரன் அசத்தல்- ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

தினத்தந்தி
|
2 Oct 2022 1:00 PM GMT

இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை வீழ்த்தியது.

செங்டு,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சத்யன் ஞானசேகரன் தலைமையிலான இந்திய ஆடவர் அணி பங்கேற்றுள்ளது. இந்திய அணியின் அனுபவ வீரர் சரத் கமல் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் சத்யன், மானவ் தாக்கர், ஹர்மித் தேசாய் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று குரூப் சுற்றில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் சத்யன் உலக தரவரிசையில் 36வது இடத்தில் உள்ள தூடா பெணிடிக்டை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை சத்யன் 11-13,4-11,11-8,11-4,11-9 என்ற கணக்கில் வென்றார்.

அடுத்து நடைபெற்ற போட்டியில் ஹர்மீத் தேசாய், உலக தரவரிசையில் 9வது இடத்திலுள்ள கியூ டங்-யிடம் 11-7,11-9,11-13,11-3 என்ற கணக்கில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் மானவ் தாக்கர் ஜெர்மனியின் வால்தர் ரிகார்டோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் மானவ் 13-11,6-11,11-8,12-10 என்ற கணக்கில் போராடி வென்றார். இதன்காரணமாக இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்று இருந்தது.

அடுத்து உலக தரவரிசையில் 9வது இடத்திலுள்ள கியூ டங்கை எதிர்த்து தரவரிசையில் 37வது இடத்திலுள்ள சத்யன் விளையாடினார். இந்த போட்டியில் சத்யன் 10-12, 7-11, 11-8, 11-8, 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்