< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா
|18 Aug 2023 3:48 AM IST
சீனா 1,749 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
பாகு,
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் அணிகள் பிரிவு போட்டி நடைபெற்றது.
இதில் ஷிவா நார்வால் (579), சரப்ஜோத் சிங் (578) , அர்ஜூன்சிங் சீமா (577) ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,734 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தியது. சீனா 1,749 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், ஜெர்மனி 1,743 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன.