< Back
பிற விளையாட்டு
உலக பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி - இந்திய வீரர் பரம்ஜித் குமார் தங்கம் வென்றார்
பிற விளையாட்டு

உலக பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி - இந்திய வீரர் பரம்ஜித் குமார் தங்கம் வென்றார்

தினத்தந்தி
|
24 Aug 2023 10:57 PM IST

மொத்தமாக 462 கிலோ எடையைத் தூக்கி பரம்ஜித் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

துபாய்,

துபாயில் உலக பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் 49 கிலோ எடைப் பிரிவில் மாற்றுத் திறனாளி இந்திய வீரர் பரம்ஜித் குமார் கலந்து கொண்டார்.

இவர் மொத்தமாக 462 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். மேலும் பாரா பவர்லிஃப்டிங் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையையும் பரம்ஜித் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்