< Back
பிற விளையாட்டு
உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கம் வென்றார்
பிற விளையாட்டு

உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கம் வென்றார்

தினத்தந்தி
|
3 Nov 2022 2:39 AM IST

உலக டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் இளையோர் ‘கண்டன்டர்’ போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது.

சென்னை,

உலக டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் இளையோர் 'கண்டன்டர்' போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 15 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பாலமுருகன் 11-4, 11-13, 7-11, 6-11 என்ற செட் கணக்கில் புயர்டோரிகா வீரர் என்ரிக்ஸ் ரியாஸ்சிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

இதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவின் அரைஇறுதியில் பாலமுருகன் 7-11, 11-9, 11-5, 7-11, 11-13 என்ற செட் கணக்கில் எகிப்து வீரர் காபெர் யாசினிடம் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். பாலமுருகன் சென்னையில் உள்ள ராமன் டேபிள் டென்னிஸ் உயர் திறன் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்