< Back
பிற விளையாட்டு
உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமிக்கு வெள்ளிப்பதக்கம்
பிற விளையாட்டு

உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமிக்கு வெள்ளிப்பதக்கம்

தினத்தந்தி
|
31 Oct 2022 3:32 AM IST

இந்திய வீரர் சங்கர் முத்துசாமி, குவ் குவான் லின்னிடம் (சீன தைபே) தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.

சாண்டேன்டர்,

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி 14-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் குவ் குவான் லின்னிடம் (சீன தைபே) தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். சென்னையைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி உலக ஜூனியர் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற 10-வது இந்தியர் ஆவார்.

மேலும் செய்திகள்