< Back
பிற விளையாட்டு
உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 21 வயது ஜப்பான் வீரர் தங்கம் வென்றார்
பிற விளையாட்டு

உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 21 வயது ஜப்பான் வீரர் தங்கம் வென்றார்

தினத்தந்தி
|
5 Nov 2022 10:04 PM IST

21 வயதான டெய்கி ஹாஷிமோடோ உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.

லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், ஜப்பான் வீரர் டெய்கி ஹாஷிமோடோ தங்கம் வென்று அசத்தினார்.

சீனாவைச் சேர்ந்த சாங் போஹெங்க் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றிய நிலையில், மற்றொரு ஜப்பான் வீரர் வடாரு டானிகவா வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார். 21 வயதான டெய்கி ஹாஷிமோடோ, ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்