< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்..
|24 Feb 2023 10:41 PM IST
ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பைர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெண்கலம் வென்றார்.
கெய்ரோ,
சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் எகிப்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பைர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெண்கலம் வென்றார். இதுவரை 4 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.