< Back
பிற விளையாட்டு
உலக கோப்பை வில்வித்தை: இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்
பிற விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை: இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

தினத்தந்தி
|
27 Jun 2022 2:29 AM IST

உலக கோப்பை வில்வித்தை பெண்கள் அணிக்கான ரீகர்வ் பிரிவின் இறுதி சுற்றில், இந்திய குழுவினர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

பாரீஸ்,

உலக கோப்பை வில்வித்தை போட்டி (3-ம் நிலை) பாரீஸ் நகரில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் அணிக்கான ரீகர்வ் பிரிவின் இறுதி சுற்றில் தீபிகா குமாரி, அங்கிதா பாகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீனதைபேயை சந்தித்தது.

தாக்கத்தை ஏற்படுத்த தவறிய இந்திய குழுவினர் 1-5 என்ற செட் கணக்கில் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. சீன தைபே வீராங்கனை லீ சியன்-யிங் அம்புகளை மிக துல்லியமாக எய்து தங்கள் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த உலக தொடரில் இந்தியா மொத்தம் ஒரு தங்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

மேலும் செய்திகள்