< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி - 2 வெண்கலப்பதகங்கள் வென்றது இந்தியா
|18 Aug 2023 12:43 AM IST
இந்திய அணி 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் அணியை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
பாரீஸ்,
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், துஷார் ஷெல்கி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 6-2 என்ற செட் கணக்கில் ஆந்த்ரே டெர்மினோ, யுன் சாஞ்சஸ், பாப்லோ அசா ஆகியோரை கொண்ட ஸ்பெயின் அணியை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
முன்னதாக நடந்த அரைஇறுதியில் இந்தியா 0-6 என்ற செட் கணக்கில் சீன தைபேயிடம் தோற்று இருந்தது. இதேபோல் பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவில் அங்கிதா பகத், பாஜன் கவுர், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-4 என்ற செட் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது.