< Back
பிற விளையாட்டு
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி:  இந்திய வீரர் தங்கம் வென்று வரலாற்று சாதனை
பிற விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி: இந்திய வீரர் தங்கம் வென்று வரலாற்று சாதனை

தினத்தந்தி
|
23 Oct 2022 9:02 AM IST

23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார்.



போன்டிவெத்ரா,


ஸ்பெயின் நாட்டில் போன்டிவெத்ரா நகரில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில், 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத் மற்றும் துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் விளையாடினர்.

இதில், 12-4 என்ற புள்ளி கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அமன் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியா மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா ஆகியோர், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். அந்த சாதனையை விட ஒரு பங்கு மேலே சென்று அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

மேலும் செய்திகள்