< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தோல்வி
|26 Aug 2023 11:39 PM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
ஹோபன்ஹேகன்,
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தாய்லாந்து வீரர் குன்லவுட் விதித்சார்ன் உடன் மோதினார்.
1 மணி 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பிரனாய் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லவுட்டிடம் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துடன் பிரனாய் தொடரிலிருந்து வெளியேறினார்.