< Back
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் போட்டி; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் கோதை நரோகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!

Image Courtesy: Twitter

பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் கோதை நரோகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!

தினத்தந்தி
|
27 Aug 2023 7:09 AM IST

உலக பேட்மிண்டன் போட்டி தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் கோதை நரோகா, குன்லாவுத் விதித்சரன் மோத உள்ளனர்.

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கோதை நரோகா, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோதை நரோகா 25-21, 21-12 என்ற செட் கணக்கில் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை வீழ்த்தி இறுதிப்போட்டி முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்திய வீரர் பிரனாய், 3-ம் நிலை வீரரான குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண்டார்.

இதில் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லாவுத் விதித்சரணிடம் வீழ்ந்த பிரனாய் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் குன்லாவுத் விதித்சரன் - கோதை நரோகா மோதுகின்றனர்.

மேலும் செய்திகள்