< Back
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் தரவரிசை: விக்டர் ஆக்சல்சென், அகானே யமாகுச்சி தொடர்ந்து முதலிடம்
பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் தரவரிசை: விக்டர் ஆக்சல்சென், அகானே யமாகுச்சி தொடர்ந்து முதலிடம்

தினத்தந்தி
|
9 Nov 2022 3:43 AM IST

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார்.

புதுடெல்லி,

பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டென்மார்க் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த வரிசையில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான இளம் வீரர் லக்‌ஷயா சென் 6-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 11-வது இடத்திலும், எச்.எஸ்.பிரனாய் 12-வது இடத்திலும் உள்ளனர்.

இதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார்.

அதே சமயம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்