< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் தரவரிசை; இந்திய இணை முதலிடத்திற்கு முன்னேற்றம்
|24 Jan 2024 7:30 AM IST
சமீபத்தில் நடந்த மலேசியா மற்றும் இந்திய ஓபனில் 2-வது இடம் பெற்றதன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளனர்.
புதுடெல்லி,
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை 2-வது இடத்தில் இருந்து மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடந்த மலேசியா மற்றும் இந்திய ஓபனில் 2-வது இடம் பெற்றதன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த சீனாவின் லியாங் வெய்கேங் - வாங் சாங் இணை 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது. 3-வது இடத்தில் தென் கொரியா இணை உள்ளது.