< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் தரவரிசை: எச்.எஸ்.பிரனாய், பி.வி.சிந்து முன்னேற்றம்...!
|17 May 2023 6:23 AM IST
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.