< Back
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் தரவரிசை பட்டியல்: டாப் 5-ல் நுழைந்தது இந்தியா
பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் தரவரிசை பட்டியல்: டாப் 5-ல் நுழைந்தது இந்தியா

தினத்தந்தி
|
20 Dec 2022 9:55 PM IST

உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா டாப் 5-ல் நுழைந்து உள்ளது.



கோலாலம்பூர்,


உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் இரண்டு இடங்கள் முன்னேறி டாப் 5-க்குள் இடம் பிடித்து உள்ளனர்.

நடப்பு ஆண்டில் இந்த ஜோடி சிறப்பாக விளையாடி, காமன்வெல்த் போட்டியில் தங்கம் அள்ளியது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது.

இந்த இணை, பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 மற்றும் இந்திய ஓபன் சூப்பர் 500 போட்டிகளிலும் விளையாடி வெற்றி பெற்றது. அவர்கள் டாப் 5-ல் இடம் பிடித்த தகவலை இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பும் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்தி உள்ளது.

இதேபோன்று, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடம் பிடித்துள்ளார். கிதம்பி ஸ்ரீகாந்த் ஓரிடம் முன்னேறி 11 இடத்திற்கு வந்துள்ளார்.

மேலும் செய்திகள்