< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் மீண்டும் தோல்வி
|9 Dec 2022 4:09 AM IST
தொடந்து 2-வது தோல்வியை சந்தித்த பிரனாய் அரைஇறுதி வாய்ப்பை இழந்தார்.
பாங்காக்,
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. 'டாப்-8' வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சீனாவின் லூ குயாங் சூவை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-23, 21-17, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். தொடந்து 2-வது தோல்வியை சந்தித்த பிரனாய் அரைஇறுதி வாய்ப்பை இழந்தார். பிரனாய் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று உலகின் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) மோதுகிறார்.