< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் பிரனாய், லக்ஷயா சென் வெற்றி
|22 Aug 2023 1:52 AM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது.
ஹோபன்ஹேகன்,
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீரரான காலே கோல்ஜோனை (பின்லாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை (மொரீசியஸ்) தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.