< Back
பிற விளையாட்டு
உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் அன்னு ராணி 7-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்!
பிற விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் அன்னு ராணி 7-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்!

தினத்தந்தி
|
23 July 2022 2:34 PM IST

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

ஓரேகான்,

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

நேற்று மகளிருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் ஈட்டி எறிந் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் காரா விங்கர்(64.05 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின் ஹருகா கிடாகுச்சி(63.27 மீட்டர்) வெண்கலம் வென்றார்.

அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2 முறை முன்னேறிய முதல் இந்தியர் அன்னு ராணி ஆவார்.

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 24 அன்று நிறைவடையும்.

மேலும் செய்திகள்