< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பெண்கள் தேசிய குத்துச்சண்டை: தங்க பதக்கம் வென்று அசத்திய லவ்லினா, நிகாத் ஜரீன்
|26 Dec 2022 10:41 PM IST
பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா மற்றும் நிகாத் ஜரீன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
போபால்,
6-வது தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் கோபாலில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தெலுங்கானா அணிக்காக களம் கண்ட ஜரீன் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் ரெயில்வே வீராங்கனை அனாமிகாவை தோற்கடித்தார். இதே போல் 75 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான அசாமின் லவ்லினா 5-0 என்ற கணக்கில் அருந்ததியை (சர்வீசஸ்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
இந்த போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 10 பதக்கங்களை குவித்த ரெயில்வே அணி மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது.