< Back
பிற விளையாட்டு
பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி: லோவ்லினா, நிகாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

 image credit: ANI.com

பிற விளையாட்டு

பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி: லோவ்லினா, நிகாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
25 Dec 2022 3:16 AM IST

மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.

போபால்,

6வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது. இதில் அசாமை சேர்ந்த லோவ்லினா, 75 கிலோ கால் இறுதிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் மீனா ராணியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லோவ்லினா, 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் மீனா ராணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் கோவாவின் தனிக்ஷா சாவரை நிகாத் எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், தனிஷாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி போட்டிகள் இன்றுமுதல் தொடங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்