< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு : சாதித்த தமிழக வீராங்கனை- தடை தாண்டும் போட்டியில் வெண்கலம் வென்றார்
|3 Oct 2023 5:14 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி தொடரின் 11-வது நாளான இன்று நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கல பதக்கத்தை வென்றார்.