< Back
பிற விளையாட்டு
தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி - விண்ணப்பிக்க வேண்டுகோள்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி - விண்ணப்பிக்க வேண்டுகோள்

தினத்தந்தி
|
19 Oct 2023 4:09 AM IST

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு பெரு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் நிதி பெறப்படுகிறது. இதில் இருந்து பல்வேறு வீரர்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த போதிய நிதிவசதி இல்லாத வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சி பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற்றிட https://tnchampions.sdat.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்