< Back
பிற விளையாட்டு
தடகள வீரர்களுக்கு வரவேற்பு..!!
பிற விளையாட்டு

தடகள வீரர்களுக்கு வரவேற்பு..!!

தினத்தந்தி
|
12 Oct 2023 8:17 AM IST

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக தடகள வீரர்களுக்கு பணமாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் பதக்கப்பட்டியலில் முதல்முறையாக 100-ஐ தாண்டி சரித்திரம் படைத்த இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என்று மொத்தம் 107 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது. ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு இதுவாகும்.

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனை வித்யா, வீரர் ராஜேஷ் ரமேஷ் மற்றும் பயிற்சியாளர் நேற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பணமாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கநாணயம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்