< Back
பிற விளையாட்டு
கைப்பந்து போட்டி தொடக்கம்
பிற விளையாட்டு

கைப்பந்து போட்டி தொடக்கம்

தினத்தந்தி
|
18 Sept 2023 10:06 AM IST

‘பி’ டிவிசன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 'பி' டிவிசன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, ஜி.எஸ்.டி.- சுங்க இலாகா கூடுதல் கமிஷனர் கோவிந்தராஜ் மற்றும் கைப்பந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்