< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கைப்பந்து லீக்: கொல்கத்தாவிடம் வீழ்ந்தது மும்பை
|8 March 2024 5:55 AM IST
நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணி, மும்பை மீட்டியார்சை சந்தித்தது.
சென்னை,
9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணி, மும்பை மீட்டியார்சை சந்தித்தது. இதில் அபாரமாக செயல்பட்ட கொல்கத்தா அணியினர் 15-12, 16-14, 15-11 என்ற நேர் செட் கணக்கில் மும்பையை சாய்த்தனர். தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 3-வது வெற்றியாகும்.
இன்றைய ஆட்டங்களில் சென்னை பிளிட்ஸ்- பெங்களூரு டார்படோஸ் (மாலை 6.30 மணி), ஆமதாபாத் டிபென்டர்ஸ்- கோழிக்கோடு ஹீரோஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.