< Back
பிற விளையாட்டு
கைப்பந்து லீக் போட்டி: தொடக்க ஆட்டத்தில் பச்சையப்பா அணி வெற்றி
பிற விளையாட்டு

கைப்பந்து லீக் போட்டி: தொடக்க ஆட்டத்தில் பச்சையப்பா அணி வெற்றி

தினத்தந்தி
|
2 Dec 2022 12:52 AM IST

கைப்பந்து லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பச்சையப்பா அணி வெற்றிபெற்றது.

சென்னை,

ராம்பிரகாஷ் வாலிபால் அகாடமி சார்பில், சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் 200-ம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி மாநில பள்ளி கைப்பந்து லீக் போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 120 அணிகள் பங்கேற்றுள்ளன.

லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் பி.ஆரோக்ய சகாயராஜ் தொடங்கி வைத்தார். ராம்பிரகாஷ் வாலிபால் அகாடமி செயலாளர் எஸ்.முகமது ஜின்னா, பொருளாளர் கரிமுல்லா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் பச்சையப்பா அணி 25-20, 20-25, 25-20 என்ற செட் கணக்கில் ஏ.ஜே.எஸ்.நிதி அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் செயின்ட் ஜோசப்ஸ் அணி 25-16, 25-13 என்ற நேர்செட்டில் ஒய்.எம்.சி.ஏ.வையும், செயின்ட் பீட்ஸ் 25-14, 25-13 என்ற நேர்செட்டில் ராமகிருஷ்ணாவையும் தோற்கடித்தன.

மேலும் செய்திகள்