< Back
பிற விளையாட்டு
கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
18 March 2024 2:11 AM IST

நேற்று நடந்த சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் மும்பை மீட்டியார்ஸ் அணி, டெல்லி டூபான்சை எதிர்கொண்டது.

சென்னை,

3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் மும்பை மீட்டியார்ஸ் அணி, டெல்லி டூபான்சை எதிர்கொண்டது. இதில் மும்பை அணி 15-11, 12-15, 15-12, 17-15 என்ற செட் கணக்கில் டெல்லியை சாய்த்தது.

மற்றொரு ஆட்டத்தில் சரிவில் இருந்து வலுவாக மீண்டு வந்த ஆமதாபாத் அணி 16-18, 13-15, 15-11, 15-8, 15-13 என்ற செட் கணக்கில் கோழிக்கோடு ஹீரோசை தோற்கடித்தது. கடைசி லீக்கில் தோற்றாலும் சூப்பர் 5 சுற்று முடிவில் கோழிக்கோடு அணி 2 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்து நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மேலும் செய்திகள்