கைப்பந்து லீக்: பெங்களூரு அணி 2-வது வெற்றி
|நேற்று நடந்த சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் மும்பை மீட்டியார்ஸ் அணி, பெங்களூரு டார்படோசை சந்தித்தது.
சென்னை,
9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் மும்பை மீட்டியார்ஸ் அணி, பெங்களூரு டார்படோசை சந்தித்தது. தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 15-13, 16-14, 15-10 என்ற நேர் செட் கணக்கில் மும்பையை தோற்கடித்தது. 4 ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், மும்பை அணி ஒரு வெற்றி, 2 தோல்வி என 2 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது.
இன்றைய ஆட்டங்களில் மும்பை மீட்டியார்ஸ் - டெல்லி டூபான்ஸ் (மாலை 6.30 மணி), கோழிக்கோடு ஹீரோஸ் - ஆமதாபாத் டிபென்டர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகிறது.
இன்றுடன் சூப்பர் 5 சுற்று ஆட்டங்கள் முடிவடைகிறது. இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணி வெளியேற்றுதல் சுற்றில் வருகிற 19-ந் தேதி மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.