< Back
பிற விளையாட்டு
வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் - கங்குலி
பிற விளையாட்டு

வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் - கங்குலி

தினத்தந்தி
|
11 Aug 2024 6:56 PM IST

வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

பாரீஸ்,

பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்துகொண்டார். தனது அபார திறமையால் அடுத்தடுத்து வெற்றிபெற்ற அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். தங்கப்பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் திடீரென அறிவித்தார்.இந்நிலையில், ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவிதித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

வினேஷ் போகத் முறையாக தகுதி பெற்றிருந்ததால்தான், இறுதிப் போட்டி வரை அவர் முன்னேறி உள்ளார்; இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலே, தங்கம் (அ) வெள்ளிப் பதக்கம் என்பது உறுதி. அவர் தவறுதலாக தகுதி நீக்கம் செய்யப்பட்டாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் அவர் வெள்ளிப் பதக்கத்திற்காவது தகுதியானவர். என தெரிவித்தார் .

மேலும் செய்திகள்