< Back
பிற விளையாட்டு
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரையிறுதியில் போராடி தோல்வி...!!
பிற விளையாட்டு

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரையிறுதியில் போராடி தோல்வி...!!

தினத்தந்தி
|
16 July 2023 11:45 AM IST

அரைஇறுதியில் லக்ஷயா சென் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் லி ஷி பெங்குடன் (சீனா) போராடி தோல்வி அடைந்து வெளியேறினார்.

கவுன்சில் பிளப்ஸ்சில்,

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் நடந்து வருகிறது.இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதில் நடந்த அரைஇறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சீன வீரர் லி ஷி பெங் உடன் மோதினார்.

தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.முதல் இரண்டு செட்டை ஆளுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றினர்.இதனால் கடைசி செட் பரபரப்பான கட்டத்தை எட்டியது.இதில் கடைசி செட்டை சீன வீரர் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1 மணிநேரம் 16 நிமிடங்கள் இந்த போட்டியில் லக்ஷயா சென் 17-21,24-22 மற்றும் 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்