< Back
பிற விளையாட்டு
அமெரிக்க தடகளம்: டெல்லியைச் சேர்ந்த இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்
பிற விளையாட்டு

அமெரிக்க தடகளம்: டெல்லியைச் சேர்ந்த இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்

தினத்தந்தி
|
8 April 2023 7:55 PM GMT

டெல்லியை சேர்ந்த 24 வயது தேஜஸ்வின் சங்கர் 7,684 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

புதுடெல்லி,

அமெரிக்காவில் உள்ள அரிஜோனஸ் பல்கலைக்கழகத்தில் தடகள போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான டெக்கத்லான் பந்தயத்தில் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார்.

100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், போல்வால்ட், 1,500 மீட்டர் ஓட்டம் உள்பட 10 பந்தயங்களை உள்ளடக்கிய சவாலான டெக்கத்லான் போட்டியில் டெல்லியை சேர்ந்த 24 வயது தேஜஸ்வின் சங்கர் 7,684 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தேசிய சாதனையை தவறவிட்டார்.

மேலும் செய்திகள்