< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கோவா சேலஞ்சர்ஸ் சாம்பியன்
|31 July 2023 10:22 AM IST
இறுதி ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ் நடப்பு சாம்பியன் சென்னை லயன்சை வீழ்த்தி மகுடம் சூடியது.
புனே,
6 அணிகள் இடையிலான 4-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு நடந்த திரில்லிங்கான இறுதி ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ் 8-7 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னை லயன்சை வீழ்த்தி மகுடம் சூடியது.
இதன் ஒற்றையர் பிரிவின் கடைசி ஆட்டத்தில் ரீத் டெனிசனுக்கு எதிராக சென்னை வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 3-0 என்ற செட் கணக்கில் வென்றால் பட்டத்தை தக்கவைக்கலாம் என்ற சூழலில் அவரால் 2-1 என்று கணக்கில் தான் செட்டை வெல்ல முடிந்தது. இதன் மூலம் கோவா அணி கோப்பையை கைப்பற்றியது.