< Back
பிற விளையாட்டு
உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

தினத்தந்தி
|
29 April 2024 2:27 AM IST

பெண்களுக்கான 30-வது உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.

செங்டு,

பெண்களுக்கான 30-வது உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் சிங்கப்பூரை சந்தித்தது. இதில் அபாரமாக ஆடிய இந்தியா 4-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் இஷாரானி பருவா, அன்மோல் காரப், இரட்டையர் பிரிவில் பிரியா கொன்ஜெங்பம்- சுருதி மிஸ்ரா, சிம்ரன் சிங்கி- ரித்திகா தாக்கர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்திய அணி தனது கடைசி லீக்கில் சீனாவுடன் நாளை மோதுகிறது.

மேலும் செய்திகள்