< Back
பிற விளையாட்டு
உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகாத் ஜரீனுக்கு கார் பரிசு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்..!
பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகாத் ஜரீனுக்கு கார் பரிசு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்..!

தினத்தந்தி
|
10 Aug 2023 5:10 PM IST

உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகாத் ஜரீனுக்கு கார் பரிசு வழங்கி மஹிந்திரா நிறுவனம் கவுரவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற உலக பெண்கள் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு பரிசு வழங்குவோம் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது புதிய தார் எஸ்யூவி வகை காரை இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு தங்கள் பிரபலமான கார்களை வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்