பார்முலா1 கார்பந்தயம் இன்று தொடக்கம்
|மொத்தம் 24 சுற்று பந்தயங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன.
சகிர்,
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி, டிசம்பர் 8-ந்தேதி அபுதாபி கிராண்ட்பிரியுடன் முடிவடைகிறது. மொத்தம் 24 சுற்று பந்தயங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் 10 இடங்களுக்குள் வருவோருக்கு 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 வீதம் புள்ளிகள் வழங்கப்படும். 24 சுற்று போட்டி முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் சாம்பியன் கோப்பையை கையில் ஏந்துவார்.
இந்த ஆண்டுக்கான முதல் போட்டி பக்ரைன் கிராண்ட்பிரி என்ற பெயரில் அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் இன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. பந்தய தூரம் மொத்தம் 308.238 கிலோமீட்டராகும். முந்தைய சீசனை போன்றே இந்த தடவையும் 3 முறை சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பெனுக்கும் (ரெட்புல் அணி), 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டனுக்கும் (மெர்சிடஸ் அணி) இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ், மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க், இங்கிலாந்தின் ரஸ்செல், லான்டோ நோரிஸ் ஆகியோரும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பெனின் கார் இன்றைய ரேசில் முதல்வரிசையில் இருந்து புறப்படும்