< Back
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் ஸ்ரீகாந்த் வெளியேற்றம்
பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் ஸ்ரீகாந்த் வெளியேற்றம்

தினத்தந்தி
|
1 Jun 2023 3:22 AM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து வெளியேறினார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 59-வது இடத்தில் உள்ள இந்திய இளம் வீரர் கிரண் ஜார்ஜ் 21-18, 22-20 என்ற நேர் செட்டில் 9-ம் நிலை வீரரும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான ஷி யுகிக்கு (சீனா) அதிர்ச்சி அளித்தார். இளம் நட்சத்திரம் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் ரவுண்டில் 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வாங் ஜூ வெய்யை (சீனதைபே) விரட்டினார். இந்த வெற்றிக்காக அவர் 70 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

அதே சமயம் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 8-21, 21-16, 14-21 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் வீழ்ந்தார். வெங் ஹாங் அடுத்து கிரண் ஜார்ஜூடன் மோதுகிறார். இதே போல் சாய் பிரனீத், சமீர் வர்மா, பிரியான்ஷூ ரஜாவத் ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையைக் கட்டினர்.

மேலும் செய்திகள்