< Back
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி
பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி

தினத்தந்தி
|
4 Feb 2023 1:39 AM IST

கால்இறுதி ஆட்டத்தில் சாய் பிரனீத் சீன வீரர் லி ஷி பெங்கிடம் போராடி தோற்று வெளியேறினார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 49-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத், 23-வது இடத்தில் உள்ள லி ஷி பெங்கை (சீனா) சந்தித்தார்.

திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 17-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் லி ஷி பெங்கிடம் போராடி தோற்று வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்