< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் வீழ்ந்த லக்ஷயா சென்...!
|3 Jun 2023 8:16 PM IST
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
பாங்காங்,
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில் வளரும் வீரர்கள் முன்னேறுகிறார்கள்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரட் லக்ஷயா சென் தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-13 என கைப்பற்றிய லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 17-21, 13-21 என்ற செட் கணக்கில் இழந்தார். இதன் மூலம் அரையிறுதியில் லக்ஷயா சென் தோல்வி அடைந்து வெளியேறினார்.